தேன்கனிக்கோட்டை, ஆக.14: கெலமங்கலம் வட்டாரம் உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தேன்கனிக்கோட்டை அரிமா சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு விழா நடந்தது. அரிமா சங்க தலைவர் டாக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் மற்றும் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் மோகன், ஊராட்சி தலைவர் மணி ஆகியோர் கலந்துகொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம், சிறுதானியங்களின் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர். விழாவில் 150 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.
உலக தாய்ப்பால் தின விழா
previous post