பெரம்பலூர், ஜூன். 6: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு- மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப் படுத்தும் பணிகளை பார்வையிட்டார். தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ், தமிழ்நாடு தூய்மைமிஷன் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. நேற்று(5ஆம்தேதி) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில், தூய்மை பணிகள் மற்றும் தூய்மை நடைபயணம் மேற்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில், ஒரே நாளில் தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மை நடை பயணம் மேற்கொண்டனர். பின்னர், மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும் பயன் படுத்தப்படாத கழிவுகள், காகிதக் குப்பை, நெகிழிக் கழிவுகள், மின் கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப் பட்டு வருவதை மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டார். மேலும், சேகரம் செய்யப்பட்ட கழிவுகள் அனைத்தையும் தரம் பிரித்து, அவைகளை எடையிட்டு, மறுசுழற்சிக் கழிவுகளாக விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டக் கலெக்டர் தூய்மை பாரத இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட செயற்பொறியாளர் நிர்மலா ஜோஸ்பின், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சொர்ணராஜ், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜபூபதி, மாவட்டக் கலெக்டர் அலுவலக ப் பொதுமேலாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.