பெரம்பலூர், ஜூன் 6: பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (5ம் தேதி) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக 50க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடும் விழா நடை பெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய பல்கீஸ் தலைமை வகித்து மரக் கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி, பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 பிரேம்குமார்,
குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 கவிதா, பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி தினேஷ், பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் ரேஷ்மா ஆகியோரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் சேகர், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் சிவசங்கர், மூத்த வழக்கறிஞர்கள் முகமது இலியாஸ், தமிழ்ச்செல்வன், பேரா முருகையன், வேப்பந்தட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் தமிழரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், சட்ட தன்னார்வலர்கள், வனத் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா செய்திருந்தனர்.