தஞ்சாவூர், ஆக. 31: நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப உலக சாதனை போட்டியில் அய்யம்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குப்பெற்று வெற்றி பெற்றனர். மாநில அளவிலான சிலம்பு கலை போட்டி நெய்வேலியில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை கருப்பட்டையான்குளத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுகள் வென்றார்கள். அந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர்கள் இடைவிடாது ஒரு மணி நேரம் சிலம்பை சுற்றி சாதனை படைத்து வெற்றி பெற்றனர். பள்ளியின் தாளாளர் ஜனாப். அப்துல்ரஹிம் சிலம்பு கலை ஆசிரியர் தினேஷ் மற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் கனேசன் சுபா, இராசேந்திரன் தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம், ஆசிரியர்கள், முத்து, மோகன் கனகவேல் செல்வராகவன் அன்புதாசன், ஜெகன்ராஜ், ராகவன், வெங்கடம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளது வாழ்த்து தெரிவித்தனர்.