ஊட்டி, ஜூன் 16: பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பில் உலக எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு ஒய்எம்சிஏ., கவின் கலைக் கூடத்தில் வரலாற்றுப் பார்வையில் உலக மாவீரன் சேகுவாரா என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஓய்வுபெற்ற வனச்சரகர் வித்யாதரன் தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்து, உலக மனித விடுதலையின் சேகுவராவின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
ஒய்எம்சிஏ., செயலர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயப்பிரகாஷ், முருகப்பன் ஜெசி எழுதிய நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும் என்ற நூலை வெளியிட ஜனார்தனன் பெற்றுக் கொண்டார். கவிஞர் நீலமலை ஜேபி வரவேற்புரை நிகழ்த்தினார். புரட்சி தந்த பாடம் என்ற தலைப்பில் தனசிங் இசுரவேல் உரையாற்றினார்.