சென்னை: உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50 GB இலவச டேட்டா தருவதாக சமூகவலைத்தளத்தில் வரும் பதிவு போலியானது என பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்துள்ளது. GB இலவச டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். இணைப்பை கிளிக் செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை எச்சரித்திருக்கிறது….