திருச்சி, பிப்.16: திருச்சி உறையூர் குழுமணி சாலையில் மது விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் வந்தது. தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த ராஜன் (47) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 90 மதுபாட்டில்களை உறையூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.