விருதுநகர், ஜூன் 13: விருதுநகர் நகராட்சியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி நேற்று எடுக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சுகந்தி தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்ஆண்டவர், காளி உட்பட நகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.