தில்லைநகர், ஆக.19: திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த இலங்கையைச் சேர்ந்தவர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கொழும்பு கிராண்ட் பாத் வீதியைச் சேர்ந்தவர் ராஜாரத்தினம் (54). இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தற்போது திருச்சி உறையூர் சீனிவாசநகரில் உள்ள அவரது சகோதரி மனோரஞ்சிதம் வீட்டுக்கு வந்துள்ளார்.
இங்கு வந்த இடத்தில் கடந்த 9ம்தேதி உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரி மனோரஞ்சிதம் கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய நிகழ்ச்சி
நாடக நடிகர்கள் சங்க ஆண்டு விழா: நேரம்: மாலை 6 மணி. இடம்: ரசிக ரஞ்சனசபா,
திருச்சி. சிறப்பு விருந்தினர்: பூச்சி முருகன், தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.
நிலாவும் உலக அமைதியும் நிகழ்ச்சி: நேரம்: மாலை 3 மணி.இடம்: மதி இந்திராகாந்தி கல்லூரி, திருச்சி. சிறப்பு விருந்தினர்: மயில்சாமி அண்ணாதுரை, இந்திய விஞ்ஞானி.