Saturday, June 22, 2024
Home » உயர்கல்வி சந்தேகங்கள் தீர்க்க ஆலோசனை மையத்தை அணுகலாம்

உயர்கல்வி சந்தேகங்கள் தீர்க்க ஆலோசனை மையத்தை அணுகலாம்

by Ranjith

விருதுநகர், மே 22: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை மையத்தில் உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் உயர்கல்வி சேர்வதில் உள்ள சந்தேகங்களை வல்லுனர்களிடன் கேட்டு தெரிந்து ஆலோசனை பெற்று வருகின்றனர். 2024-25ம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்ப்பதற்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

உயர்கல்வி சேர்க்கை தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சென்று விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் 80729 18467, 75985 10114, 88389 45343, 95970 69842 ஆகிய எண்களில் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு 87542 71045, காரியாபட்டி ஒன்றியத்திற்கு 97895 60011, நரிக்குடி ஒன்றியத்திற்கு 94885 01938, ராஜபாளையம் ஒன்றியத்திற்கு 97883 96946, சாத்தூர் ஒன்றியத்திற்கு 70107 62308, சிவகாசி ஒன்றியத்திற்கு 95002 05414, திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு 82208 46444, திருச்சுழி ஒன்றியத்திற்கு 99447 62424, வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு 94436 69462, விருதுநகர் ஒன்றியத்திற்கு 94889 88222 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கை சந்தேகங்கள், ஆலோசனை உதவிகளை பெறலாம். மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

three + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi