உத்திரமேரூர், ஆக.17: உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக வளாக வளாகத்தில், பொது நிதியிலிருந்து, ₹9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் அலுவலக கட்டிடம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் கலந்துகொண்டு புதியதாக கட்டப்பட்ட கூடுதல் அலுவலக கட்டிடத்தினை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில், துணை தலைவர் இளமதிகோவிந்தராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.