Saturday, February 24, 2024
Home » உதவியாளர் பணிக்கு 340 பேர் தேர்வு

உதவியாளர் பணிக்கு 340 பேர் தேர்வு

by Francis

 

சேலம்,பிப்.2: சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்துக்கு, தேர்வான 340 பேர் கூட்டுறவு வங்கிகளில் பணிக்கு சேர்ந்தனர். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் 340 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பிட அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 4 மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பணிகளுக்காக விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த டிசம்பர் 24ம் தேதி நடந்தது.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் 19 மற்றும் 20ம் தேதி நேர்முக தேர்வு நடந்தது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. இதில், சேலம் மாவட்டத்தில் 139 பேரும், நாமக்கல்லில் 117 பேரும், தர்மபுரியில் 27 பேரும், கிருஷ்ணகிரியில் 57 பேரும் என மொத்தம் 340 பேர் தேர்வு செய்யப்பட்டனர். உதவியாளருக்கு தேர்வான 340 பேருக்கு எந்தந்த கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணி என ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிஆணை வழங்கப்பட்்டன. பின்னர் அவர்கள் ஒதுக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு. அதில் தேர்வான 340பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். பணியில் உதவியாளராக சேர்ந்துள்ளவர்களுக்குஉரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi