புதுக்கோட்டை, பிப். 20: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அனலாக அடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலைநில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திமுக சார்பில் நேற்று கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதற்கு புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் அண்ணாதுரை, ரவிக்குமார், பேரூராட்சி துணைதலைவர் இம்தியாஸ் உள்ளிட்ட திகவினர் பலர் கலந்துகொண்டனர்.