மண்டபம்,நவ.28: மண்டபம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கட்சியின் நகர் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடினார்கள். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மண்டபத்தில் திமுக கட்சியின் நகர செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில், மண்டபம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதன் பின்னர் கட்சி தொண்டர்களுக்கு, திமுக தலைவர்களின் படங்கள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட டீசர்ட் வழங்கி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட திமுக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
0
previous post