சிவகங்கை,நவ.8: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இளைஞரணி, சிவகங்கை வடக்கு ஒன்றியம் மற்றும் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் மலம்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. ஒன்றிய செயலாளர் திருமலை முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 28 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பை, ரூ.7000 பரிசு வழங்கப்பட்டது.
வடமாடு மஞ்சுவிட்டு நிகழ்ச்சியை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதிவாணன், கிங் கார்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துவேல்செல்வம் ஏற்பாட்டுகள் செய்திருந்தனர். மேலும் இதில் ஒன்றிய தலைர் மஞ்சுளாபாலசந்தர், ஒன்றிய துணை செயலாளர் பத்மாவதி பிரபாகரன், ஒன்றிய பொருளாளர் ராமமூர்த்தி, அவைத்தலைவvர் பால்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.