உதகை: உதகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஆன்லைனில் 2,000 டிக்கெட்டுகளை விற்று ரூ.10 லட்சம் மோசடி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். உதகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தனியார் திருமணமண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்றனர். அதில் 2000 டிக்கெட்களை ரூ.10 லட்சத்துக்கு விற்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி போலியானது மேலும் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தெரியவந்ததது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடியில் ஈடுபட்ட சரவணன், சித்தார்த், ஜாக்சன், மோனிஷ்குமார் ஆகியோரை காவல்துறை கைது செய்து அவர்களது கார், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தது. …