ஜெயங்கொண்டம், ஜூன் 28: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் தலைமையில், காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாணவிகள் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி, முதல் நிலை காவலர் சுரேஷ், ராஜிவ்காந்தி மற்றும் ஆசிரியர்கள் செல்வராஜ், வனிதா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.