உடுமலை: உடுமலை ரயில் நிலையத்தில் தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கோவையில் இருந்து மதுரைக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கும், பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் மற்றும் சென்னைக்கும் இயக்கப்படும் ரயில்கள் உடுமலை வழியாக செல்கின்றன. பழனி கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். பயணிகள் வசதிக்காக உடுமலை ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்ஓ) இயந்திரம் இருந்தது. தற்போது, அந்த இயந்திரம் பல மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது.