உடுமலை, ஆக. 29: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் கிராமத்தில் நேற்று மக்களின் முதல்வர் முகாம் நடந்தது. முகாமில் ராவனாபுரம், புங்கமுத்தூர், செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான செழியன், உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் மெஞ்ஞான மூர்த்தி, செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் மலர்விழி பாபு, ஒன்றிக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், துணைத் தலைவர் சண்முக வடிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் கவிதாமணி ரங்கநாதன், திலகவதி பழனிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அபர்ணா ராம்குமார் தெய்வானை சுப்ரமணி நடேஷ் செல்வகுமார் மற்றும் உபதலைவர்கள் திமுக நிர்வாகிகள் செந்தில், கோழிக்கடை முருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை திமுக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மடத்துக்குளம் தாலுகா பகுதியில் மைவாடி, சோழமாதேவி, வேடப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் சோழமாதேவியில் நடந்தது. இதில், எம்.பி. ஈஸ்வரசாமி, மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, தாசில்தார் பானுமதி, ஒன்றிய ஆணையாளர் சாதிக் பாஷா, ஊராட்சி மன்ற தலைவர்கள், முருகன், சாகுல் அமீது, துர்க்கை வேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மைவாடி ஊராட்சி செயலாளர் இசாக் நன்றி கூறினார்.