உடுமலை, செப். 20: உடுமலையில் கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர் கூட்டம் ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி தலைமையில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உறுப்பினர்கள் சுமதி, ராஜேஸ்வரி, தங்கமணி, திருமலைசாமி, சங்கரன், ஒன்றிய கழக நிர்வாகிகள் சாமிநாதன், மலர்விழி, கார்மேகம், செந்தில்வேல், மணியரசு, ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சேகர் வரவேற்றார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் காமாட்சி அய்யாவு, கலாவதி பழனிசாமி, முத்துலட்சுமி பழனிசாமி உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளும், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் லதா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் அய்யாவு, நாகராஜன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் துணை அமைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகளும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் சந்தோஷ், கணக்கம்பாளையம் பாஸ்கரன், கல்லாபுரம் ஷேக்பரீத், குறிஞ்சேரி மணியரசு, கண்ணம்மநாயக்கனூர் குமுதா உள்ளிட்ட கிளைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.