உடுமலை, ஆக. 23: உடுமலை அரசு கலை கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 1980-83ம் ஆண்டில் பயின்றவர்கள் கலந்துகொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்தவர்கள், ஓய்வுபெற்றவர்கள் என ராமசாமி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
கல்லூரியில் பயின்ற காலத்தில் தமக்கிருந்த போக்குவரத்து வசதி, ஆசிரியர்- மாணவர் உறவு, பாடம் நடத்தும்முறை, கல்லூரியின் வளர்ச்சி, மாற்றங்கள். இன்று இருக்கின்ற கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றைப் பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். தொடக்கத்தில் கல்லூரி வளாகத்தை பார்வையிட்டனர். நிறைவாக முன்னாள் மாணவர்கள் என்ற நிலையில் விரைவில் மிகப்பெரிய அளவிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கல்லூரியின் வளர்ச்சிக்கு துணை புரிவதாக உறுதியளித்தனர்.