வேலூர், ஆக.24: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் ரத்த காயத்துடன் போதையில் வந்து வாலிபர் கூச்சலிட்டுக்கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் சட்டை இன்றி, உடலில் ரத்த காயங்களுடன் வந்தார். அவர் கலெக்டர் அலுவலக போர்டிகோவில் நின்றுகொண்டு, கூச்சலிட்டார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் ஊசூரைச் சேர்ந்த லட்சுமணன், என்பது வேலூர் மார்க்கெட்டில் வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும் அவர் உடலில் காயங்களுடன், போதையில் இருப்பதால் போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ரத்த காயங்களுடன் ேபாதையில் இருந்தார். அவர் மீது வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது. போதையில் இருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், என்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.