உடன்குடி, நவ. 1: உடன்குடி யூனியன் குழு கூட்டம் நடந்து. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, சுடலை, யூனியன் துணை சேர்மன் மீராசிராசூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் நடந்து முடிந்த குலசேகரன்பட்டினம் கோயில் திருவிழாவில் தேங்கிய குப்பைகளை உடனடியாக அகற்றுவது, குடிநீர் பிரச்னையை தீர்க்க பம்பிக் ரூம் அமைத்து குடிநீர் குழாய்கள் அமைப்பது, மாநாடுதண்டுபத்து செட்டிவிளை சிதம்பரபுரத்தில் பைப்லைன் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் யூனியன் கவுன்சிலர்கள் தங்கலெட்சுமிஆதிலிங்கம், ராமலெட்சுமி, லெபோனி மற்றும் ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.