உடன்குடி, செப். 6: உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள், போட்டிகள் நடந்தது. உடன்குடி ஒன்றியத்துக்குட்பட்ட 4 பள்ளிகளில் இருந்து 108 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன் தலைமை வகித்தார். தொழிலதிபர் தர்மராஜ், வட்டன்விளை வி.வி.பெருமாள் நினைவுப்பள்ளி ஆசிரியை சரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு உடன்குடி பேரூராட்சி துணை தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், தொழிலதிபர் முத்துப்பாண்டி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கணேசன், ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை இந்திராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திர தொண்டர் சண்முகபாரதி செய்திருந்தார்.