உடன்குடி, மே 24: உடன்குடி கிளை நூலகத்தில் கோடை கால கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வாசகர் வட்ட தலைவர் பார்வதிசங்கர், ஆசிரியர் பத்மநாபன், கோவிந்தராஜ், சுகுமார் மற்றும் ரஞ்சித், சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். நூலகர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். குலசேகரன்பட்டினம் அரசு பொது நூலகத்தில் கோடைகால கொண்டாட்ட நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய, மாநிலத்தலைவர்களின் பெயர்களை படத்தை பார்த்து கண்டறிந்து சொல்லும் நிகழ்ச்சி, மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நந்தினி கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். ஏற்பாடுகளை நூலகர் மாதவன் செய்திருந்தார்.
உடன்குடி, குலசேகரன்பட்டினம் நூலகங்களில் கோடை கொண்டாட்டம்
0