விருதுநகர், ஜூலை 31: போட்டி தேர்வுகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் 2023-24 ஆண்டிற்கான ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் குரூப் 1 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட உள்ளது. போட்டி தேர்வு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தேர்வு தொடர்பான இலவச மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க https://forms.gle/TG6AZJzCBre3XUrZ7 என்ற Google Form பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
முதலில் பதிவு வருகை புரியும் 100 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். மேலும் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.