தஞ்சாவூர்: சம்பா சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய அரசு பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று கீழராஜவீதி ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் பாஸ்கர் பேசினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி பேசும் போது,