உசிலம்பட்டி, ஜூன் 18: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதிகளில் இன்று (18.06.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளான உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளப்பட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிழார்பட்டி, கீரிப்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கண்ணியம்பட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளும், தும்மகுண்டு துணை மின் நிலையப் பகுதிகளான சிந்துபட்டி, தும்மகுண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி
பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, சலுப்பபட்டி பி.மேட்டுப்பட்டி உள்ளிட்ட அதனை சார்ந்த பகுதிகளும், இடையபட்டி துணை நிலைய பகுதிகளான மாதரை, தொட்டப்பநாயக்கனூர், முத்துப்பாண்டிபட்டி, இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிப்பட்டி, செட்டியபட்டி, வில்லானி அறிவொளி நகர், குறிஞ்சி நகர், வாசி நகர், மற்றும் அதனை சார்ந்த பகுதிகளும், மொண்டிகுண்டு துணைமின் நிலைய பகுதிகளான உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிகுண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளமலைபட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், உ.புதுக்கோட்டை, துரைச்சாமிபுரம்புதூர், சீமானூத்து மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்சாரவாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) முத்தரசு தெரிவித்துள்ளார்.