உசிலம்பட்டி, ஆக. 14: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் உசிலம்பட்டி டிஎஸ்பி விஜயகுமாரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எம்.கல்லுப்பட்டில் மகளிர் சுய உதவி குழு நடத்தி வரும் கலைவாணி என்பவர் சுமார் 50 பேரிடம் ஆவணங்களை பெற்றுக் கொண்டு கடன் வாங்கித் தருவதாக கூறி கடன் பெற்றுக் கொண்டு தற்பொழுது அவர் தலைமறைவாகி விட்டார்.
தற்போது பைனான்ஸ் கம்பெனி மற்றும் தனியார் வங்கிகள் எங்களை பணத்தை கட்ட சொல்கிறார்கள். கலைவாணியிடம் இருந்து பணத்தை மீட்டு தனியார் வங்கியில் செலுத்த உதவிட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை பெற்றுக்கொண்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி விஜயகுமார் பொதுமக்களிடம் தெரிவித்தார்.