Sunday, June 22, 2025
Home மருத்துவம்உடல்நலம் உங்கள் கையில் உங்கள் உணவுமுறை உலகையும் காக்கட்டும்!

உங்கள் உணவுமுறை உலகையும் காக்கட்டும்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்Planetary diet சொல்லும் சுற்றுச்சூழல் செய்திஎத்தனையோ விதம்விதமான டயட்டுகள் உடல்நலம் காக்கும் பொருட்டு இருக்கின்றன. இவற்றில் இருந்து சற்று வித்தியாசமானது Planetary health diet. உங்கள் உடல்நலனைப் போலவே உலகைக் காப்பதாகவும் டயட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகியிருப்பதுதான் Planetary health diet. சுற்றுச்சூழலின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் இந்த உணவுமுறை மாற்றம் உடனடி தேவை என்றும் வலியுறுத்துகிறார்கள். சர்வதேச அளவிலான 37 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து இந்த உணவுமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.The Planetary Healthy Diet என்றால் என்ன?Planetary Healthy Diet முறையில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத உணவுகளையே உண்ண வேண்டும் என்கிறார்கள். குறிப்பாக அதிகம் Process செய்யப்படும் உணவுகளையும், ரசாயன உரங்களால் ஆன காய்கறிகளையும், மரபணு மாற்றப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் நம் உணவில் காய்கறி, பழங்கள், கொட்டை வகைகள் ஆகியவற்றுடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இனிப்பும் இருக்கலாம். இதற்கென லான்செட் கமிஷன் ஒரு துல்லியமான வழங்கியிருக்கும் உணவுத்திட்டத்தையும் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இவற்றை துல்லியமாக சரி பார்த்து உண்ண முடியாது என்றாலும், இதன் அடிப்படையை மனதில் கொண்டு உணவுமுறையை அமைத்துக் கொள்ளலாம். இந்த சார்ட்டில் உள்ள கிழங்கு வகைகளை ஒரு நாளைக்கு 50 கிராம் உண்ணலாம். புரதச்சத்து இறைச்சியில் மட்டும் கிடைப்பதில்லை. பயிர் வகைகளிலும் அதிகமாக புரதம் உள்ளது. இறைச்சி உண்ணும்போது அதிக அளவில் உண்பதைத் தவிர்த்து குறிப்பிட்ட அளவில் உண்டால் எந்தவிதமான நோயும் நம்மை தாக்காது.முழு தானியங்களை ஒரு நாளைக்கு 232 கிராம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 31 கிராம் வரை சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றன. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்ற அந்த 2 வகையினை பலரும் அறிந்திருப்போம். இதில் முடிந்த வரை நல்ல கொழுப்பு (Unsaturated fatty acids) வகை உணவுகளைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. நல்ல கொழுப்பினை ஒரு நாளைக்கு 40g அளவுக்கு சேர்க்கலாம்.இந்த சார்ட் ஒரு நாளைக்கு 2,500 கலோரி மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஒருவரின் வயது, உடலின் அளவு, பாலினம், உடல் செயல்பாடு ஆகிய அனைத்தையும் கருதி சார்ட் உருவாக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற உணவு சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். உடல் பருமன், புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வரக்கூடும்.The Planetary Healthy Diet தரும் நன்மைகள்இந்த உணவுமுறையை அனைவரும் பின்பற்றலாம். நம் ஆரோக்கியத்திற்காகவே உருவாக்கப்பட்டது. உலகம் மாசு அடையாமல் இருப்பதற்காக சுற்றுச்சூழல் கோணத்தில் உருவாகியது என்பது இதன் மதிப்பை கூட்டுகிறது. Planetary Diet உலகம் அழிவதைத் தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளரச்செய்கிறது. 2015-ம் ஆண்டில் Planetary health Diet அமைக்கப்பட்டது.Eat-Lancet அடுத்தகட்ட அறிக்கைசுற்றுச்சூழல் தாக்கத்தை தடுக்க 2 ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும். உணவு இழப்பு, தேவையற்ற உணவுக்கழிவைத் தடுக்க வேண்டும். மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த பூமி நன்றாக இருக்க வேண்டும். அதற்கு சுத்தமான நீர், காற்று, இருப்பிடம், நல்ல உணவு அனைத்தையும் உருவாக்க வேண்டும். இதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும். – கவிபாரதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi