தேனி, ஜூலை 6: தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத்துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை செம்மைப்படுத்தி, அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும் வகையில், ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டம் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமை வகித்தார். இதில், உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.