ஈரோடு, ஆக. 28: ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகளிடம் மனுக்களும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.