அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டையம்பாளைம், செலம்பன் குட்டை கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு செல்ல கொண்டையம்பாளையம் ஏரிக்கு செல்லும் நீர் வழிப்பாதையில் உள்ள தரைவழி சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த கொண்டையம் பாளையம் ஏரி நிரம்பும் போதெல்லாம் சாலை மூழ்கி விடும், இதனால், சாலை துண்டிக்கப்பட்டு நகலூர் பெருமாபாளையம் வழியாக அல்லது கரட்டூர் என சுமார் 8 கிமீ தூரம் சுற்றி அந்தியூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.