ஈரோடு, ஆக.19: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரேதமாக மது, புகையிலை பொருட்கள் விற்றதாக 4 பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இதில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக வெள்ளித்திருப்பூரில் சூர்யா (28), கருங்கல்பாளையத்தில் வேலுசாமி மனைவி பழனியம்மாள் (72), கதிரேசன் மனைவி ராசாத்தி (55), மொடக்குறிச்சியில் அருள் இருதயராஜ் (28), ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மனோஜ் குமார் (28),
பி.பெ.அக்ரஹாரத்தில் ரவிச்சந்திரன் (38) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பு.புளியம்பட்டி தேவி தியேட்டர் பகுதியில் கோவையை சேர்ந்த துரைசாமி மனைவி தமயந்தி (65), பு.புளியம்பட்டியை சேர்ந்த நஞ்சுண்டன் மனைவி மயூலா (60), பவானிசாகரில் திருமூர்த்தி (74) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.