ஈரோடு, ஜூலை21: ஈரோடு, நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைகளின் சங்கமம் என்ற தலைப்பில் மாணவ- மாணவிகளுக்கான தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் பின்னணி பாடகி ஷியாமளா தேவி கலந்து கொண்டு தனிநபர் கர்நாடக சங்கீதம், நாட்டுப்புற பாடல் இசை போட்டிகளில் நடுவராக செயல்பட்டார். 25 பள்ளிகளில் இருந்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர்.ஆர்.குமாரசாமி,கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் இளங்கோ,கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாசலம், கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பழனிசாமி,செங்கோட்டுவேலன்,பள்ளி தாளாளர் தேவராஜா,கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் வேதகிரீஸ்வரன்,கொங்கு தனியார் தொழிற்பயிற்சி மைய முதல்வர் தினேஸ்குமார்,கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வாசுதேவன், பள்ளி முதல்வர் மைதிலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ தலைவர் சி.எம்.சஞ்சய் வரவேற்றார்.முடிவில் துணைத்தலைவர் ஏ.வி.உவைஸ் அப்துல்காதர் நன்றி கூறினார். சிறப்பான ஏற்பாடுகள் செய்தவர்களை கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சத்தியமூர்த்தி,பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் பாராட்டினர்.