ஈரோடு, ஆக. 23: ஈரோடு மாவட்டத்திற்கு 2 டிஇஓக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) பணியிடமும், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமும் காலியாக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 57 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.
அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கேசவகுமார், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராகவும், நீலகிரி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த நந்தகுமார் ஈரோடு தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதில், கேசவகுமார் நேற்று ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.