ஈரோடு, அக். 31:ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட செல்வன் நகரில் புதியதாக போடப்பட்ட சாலையை, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. புதிய தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சாலை சீரமைப்புக்கு முதல் கட்டமாக ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி 3வது மண்டலத்துக்குட்பட்ட செல்வன் நகரில் புதியதாக போடப்பட்ட சாலையை, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலையின் தரம் குறித்து பரிசோதனை செய்தார். மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், செயற்பொறியாளர் சண்முகவடிவு, உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.