ஈரோடு, ஆக. 17: ஈரோடு, பெரியார் நகரில் இயங்கி வரும் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோயிலில் புதிய யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. நாளை மறுதினம் 19ந் தேதி (திங்கட்கிழமை) துவங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை காலை 7 மணி முதல் 8:30 மணி வரை ஒரு வகுப்பும், இதே தேதியில் பெண்களுக்கு காலை 10:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை ஒரு வகுப்பும், மேலும் ஆக.26ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை மாலை 7மணி முதல் 8:30 மணி வரை மற்றொரு வகுப்பும் துவங்கப்பட உள்ளன.
இவ்வகுப்புகளில் எளியமுறை தியானப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகா, காயகல்பப் பயிற்சிகள் மற்றும் சூரியநமஸ்காரம் ஆகிய அடிப்படை பயிற்சிகள் கற்றுத்தரப்பட உள்ளது. 14 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சிகளை கற்றுக் கொள்வதன் மூலம் உடல் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும், மன அழுத்தம் குறையவும், அமைதி பெறவும், உயிர் வளம் பெறவும், இளமை நீடிக்கவும் செய்கிறது.
மேலும், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகளும் துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம் என நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சேர்க்கை விவரங்களுக்கு 99449 30539,94433 61227 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.