ஈரோடு,ஜூலை21: கொளப்பலூரில் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கோபி அருகே கொளப்பலூரில் ரியோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் கராத்தே வேல்முருகன் தலைமை தாங்கினார்.நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு காமராஜரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.விழாவில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.முன்னதாக நிர்வாகி முத்துசாமி வரவேற்றார்.விழாவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் பொன்னுசாமி, எம்கேடி.கோவிந்தசாமி ஈஸ்வரன்,வரதராஜன்,சீனிவாசன்,ராமா மெட்டல் பொன்னுத்துரை, தங்கராஜ் ராஜேந்திரன்,கணேஷ்,கொங்கு தம்பி, பழனிசாமி,எமரால்டு இளங்கோ,செந்தில்,சரண்யா அன்புராஜ்,விஜய் ஆனந்த்,கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொளப்பலூரில் காமராஜர் திருவுருவ சிலை திறக்கப்பட்டது.