ஈரோடு, ஜூன் 19: ஈரோடு நகரியம் கோட்டம் நாராயணவலசு பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட 014 எண் உள்ள வெட்டுக்காட்டு வலசு பகிர்மானத்திற்கு உட்பட்ட மின் இணைப்புகளில் தற்போது வரை ஒற்றை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடப்பு மாதத்தில் இருந்து இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட உள்ளது.
அதன்படி, வெட்டுக்காட்டு வலசு மடியார் காலனி 1 முதல் 3, வெட்டுக்காட்டு வலசு ஊர் பகுதி, போஸ்டல் நகர், அருமைகார தோட்டம், சைவ மாரியம்மன் கோவில் பகுதி, தேசாங்காடு, முருகேசன் நகர், கணபதி நகர் 6வது வீதி ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு நுகர்வோர்கள் ஒற்றைப்படை மாதத்திலிருந்து இரட்டை படை மாதத்திற்கு மின் கணக்கீடு மேற்கொண்டு, வசூல் செய்ய வேண்டி வருவதால் உரிய காலத்தில் தொகையை செலுத்தி மின் துண்டிப்பினை தவிர்க்கலாம். இத்தகவலை ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.