ஈரோடு, செப்.13: ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (13ம் தேதி) காலை 10 மணியளவில் ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்தில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், வீட்டுவசதித்துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை தாங்குகிறார். இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் சீனிவாசன், மண்டல பொறுப்பாளர், பிரகாஷ், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.