ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை இருக்கிறது என அதிமுக வேட்பாளர் தென்னரசு தெரிவித்துள்ளார். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நாகரீகமான அரசியல் தான் செய்யும்; தேர்தல் நேரத்தில் இங்கே சண்டை சச்சரவுகள் இருக்காது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர். எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளன. ஈரோட்டில் எப்போதும் நாகரீகமான அரசியல் மட்டுமே நடைபெறும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் உள்ளதால் வாக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்படுகிறது. மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே, வாக்குப்பதிவை விரைவுபடுத்த தேர்தல் அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தென்னரசு கூறியுள்ளார். வாக்குப்பதிவு நேரத்தை அதிகப்படுத்துவது தொடர்பாக கட்சி தலைமை தான் கோரிக்கை விடுக்கும் என்றும் தென்னரசு தெரிவித்துள்ளார்….