ஈரோடு: பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீன மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் ஈரோடு புது மஜித் வீதியில் அமைந்துள்ள சுல்தான்பேட்டை பள்ளிவாசல் அருகில் தொழுகை முடித்த பின் வெளியே வந்த கட்சியினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது.