சத்தியமங்கலம், ஆக.31: பனையம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரத்னசாமி வரவேற்றார். பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் கலந்து கொண்டு 124 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்வில் பனையம்பள்ளி ஊராட்சி மன்ற துணை தலைவர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், வார்டு உறுப்பினர்கள் தருமன், கவிதா பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகி அண்ணாமலை, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
51 பள்ளி மாணவர்களுருக்கு சைக்கிள்: கெம்பநாயக்கன்பாளையம் சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் இளங்கோ வரவேற்றார். சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், கெம்ப நாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் 51 பள்ளி மாணவ மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரூர் துணை செயலாளர் ரஜினி தம்பி, வார்டு கவுன்சிலர் ஜோதி ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.