குளச்சல்,அக்.26: இஸ்ரேல் – பாலஸ்தீன போரை தடுத்து நிறுத்திட ஐ.நா. சபை பிரதிநிதிகளை வலியுறுத்தி குளச்சலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ஆர்.ஐ.)சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் தனபால்,லாயம் சுசீலா,கலா,பரமேஸ்வரன்,ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். நிர்வாகிகள் ஜார்ஜ் ஸ்டீபன்,ஆதித்த மார்த்தாண்டன், தங்கப்பன், செல்வராஜ், சேதுமாதவன், முருகன், ரமேஷ்குமார், வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.