இளையான்குடி, நவ.6: இளையான்குடி வட்டாரத்தில் உள்ள 55 ஊராட்சிகளில் 96 வாக்குச்சாவடி மையங்களும், பேரூராட்சி பகுதியில் 21 வாக்குச்சாவடி மையங்களும் சேர்ந்து மொத்தம் 117 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமினை எம்எல்ஏ தமிழரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதின்,கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இபுராஹீம், பேரூராட்சி கவுன்சிலர்கள் தௌலத், கனி, காதர் பாட்ஷா, ரவூப், பேரூராட்சி இளைஞரணி அமைப்பாளர் பைரோஸ்கான், ஹைதர் அலி, இபுராஹீம் ஷா, மானாமதுரை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உட்பட திமுகவினர் கலந்து கொண்டனர்.