இளையான்குடி, ஆக.30: இளையான்குடி அருகே சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, பத்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் வருடாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று காலை பத்து மணிக்கு சிறப்பு யாக பூஜை, 11 மணியளவில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியுடன் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவில் சாலைக்கிராமம், வடக்கு சாலைக் கிராமம், குயவர்பாளையம், சாலைக்கிராமம், அய்யம்பட்டி, பிச்சங்குறிச்சி,தெற்கு சமுத்திரம், வலசைக்காடு, கலைநகர் ஆகிய கிராம மக்கள் கலந்துகொண்டு வரகுனேஸ்வரரை தரிசித்துச் சென்றனர். பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.