சிவகங்கை, மே 30: இளையான்குடி அருகே வ.அண்டக்குடியில் புதிய மின் மாற்றி திறக்கப்பட்டது. மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் மின்மாற்றியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட பிரதிநிதி சாரதி(எ) சாருஹாசன், மானாமதுரை தொகுதி ஐடிவிங் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் சிவநேசன், திமுக கிளை நிர்வாகிகள் சோலைராஜ், சந்தானம், முத்துராமலிங்கம், பாலாஜி, நீலமேகம், அழகேசன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி அருகே புதிய மின் மாற்றி அமைப்பு
0
previous post