கோவில்பட்டி, ஏப். 26: கோவில்பட்டி இளையரசனேந்தலில் ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. ஏஐடியுசி மாவட்ட துணைச்செயலாளர் பாபு, நகர செயலாளர் சரோஜா, நகர துணைச் செயலாளர் முனியசாமி, இளைஞர் பெருமன்ற தலைவர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் காசிவிஸ்வநாதன் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். ஏஐடியுசி பஞ்சாலை மாவட்ட தலைவர் பரமராஜ் பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைவர் வள்ளிராஜ், செயலாளர் முனியசாமி, பொருளாளர் ஜான்சன், துணைத்தலைவர் பேச்சிமுத்து, துணைச் செயலாளர் மாரியப்பன், கணக்கர் கனகராஜ் மற்றும் சுமை தூக்கும் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு
65