பெரம்பலூர், ஜூலை20: பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் சிவ. இளங்கோ பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசுஅலுவலர் ஒன்றியத்தின் தலைவரான மறைந்த சிவ.இளங்கோவின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள தமிழ் நாடு அரசுஅலுவலர் ஒன் றிய கட்டிடத்தில் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சீவகன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் மாவட்டத் தலைவரும், ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவருமான ஓவியர் முகுந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சக்கரபாணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சி யில் பெரம்பலூர் மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட இணைசெயலாளர் விஜயகுமார், மாவட்ட தணிக்கையாளர் திலகராஜ், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி ஷோபனா, ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சிங்கபெருமாள், மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் மற்றும் இணைப்பு சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ் நாடு அரசுஅலுவலர் ஒன் றிய மாவட்டப் பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.